ஜப்பான் சென்ற விமானம் மீண்டும் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டது!
#SriLanka
Mayoorikka
2 years ago
ஜப்பானில் உள்ள நரிட்டா நோக்கிப் புறப்பட்ட இலங்கை விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
"A 330-300" ஏர்பஸ் ரக விமானம் 301 பயணிகளுடன் நேற்று இரவு 8.20 மணியளவில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
எனினும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 02 மணித்தியாலங்கள் 25 நிமிடங்களுக்குப் பின்னர் விமானம் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு காயம் ஏற்படவில்லை என்று விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயணிகளை வேறு விமானங்கள் மூலம் ஜப்பானில் உள்ள நரிடாவிற்கு அனுப்பும் நடவடிக்கை எடுத்ததாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.