Uber மூலம் 800 பேரை அமெரிக்காவிற்கு நாடுகடத்தியவருக்கு நேர்ந்தக் கதி!
கனடாவில் இருந்து சுமார் 800 இந்தியர்களை அமெரிக்காவிற்கு கடத்திய குற்றச்சாட்டில் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது சம்பந்தமான வழக்கு விசாரணைகளில் அவர் தன் குற்றங்களை ஒப்புக்கொண்டநிலையில், மூன்று வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது.
இந்திய வம்சாவளி இளைஞரான ராஜிந்தர் பால் சிங், கடத்தல் கும்பலின் முக்கிய உறுப்பினராக செயல்பட்டு வந்தது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இவர் (Uber) பயன்படுத்தி சட்டவிரோதமாக 800 இந்தியர்களை அமெரிக்காவிற்கு கடத்தியதும், இவர்களிடம் இருந்து $5,00,000 பெற்றுள்ளதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய முற்படுவர்களுக்கு இவர் உதவி செய்துள்ளது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என வழக்குறைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கோர்மனின் அறிக்கையின்படி, சிங்கின் நடவடிக்கைகள் வாஷிங்டனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் மட்டுமல்ல, இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கான பாகாப்பான பயணங்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.