முஸ்லிம்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பு

#SriLanka #Article #Muslim #Lanka4
Kanimoli
2 years ago
முஸ்லிம்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பு

முஸ்லிம்களால் ஆண்டுதோறும் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.

பல ஆண்டுகளாக, குழந்தை பாக்கியம் இல்லாத நபி இப்ராஹிமுக்குப் பிறந்த மகன்தான் நபி இஸ்மாயில். ஆனால், தமது ஒரே மகனான, நபி இஸ்மாயிலைத் தியாகம் செய்யக் கோரி நபி இப்ராஹிமுக்கு இறைவன் கட்டளையிட்டதாகக் கூறப்படுகிறது.

 நபி இப்ராஹிம் இறைக் கட்டளைக்கு இணங்க, அதை நிறைவேற்றத் தயாரானதன் மூலம் இறைவன் மீது தாம் கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையை உணர்த்தினார். அதனால், மகனுக்கு பதிலாக ஆடு, மாடு போன்ற கால்நடைகளைத் தியாகம் செய்யுமாறு இறைவன் கட்டளையிட்டான். விலங்குகளை பலி கொடுக்கும் சடங்கு குர்பான் என்று அழைக்கப்படுகிறது.

 அந்த நிகழ்வுதான் ஹஜ்ஜுப் பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது. நபி இப்ராஹிம் செய்யத் துணிந்த தியாகத்தால், தியாகத் திருநாள் என்றும் அது அழைக்கப்படுகிறது. 5 நாள் நடைபெறும் ஹஜ் யாத்திரையின் நிறைவை ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டங்கள் குறிக்கின்றன. ஆண்டுக்கு ஒருமுறை இப்பெருநாள் கொண்டாடப்படுகிறது. ஆனால், 2006ஆம் ஆண்டில் ஹஜ்ஜுப் பெருநாள் இருமுறை கொண்டாடப்பட்டது.

 அவரவர் வசதிக்கேற்ப, ஆடு, மாடு, செம்மறியாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள், குர்பான் செய்யப்படும். பின், குர்பான் செய்யப்பட்ட அந்த இறைச்சி மூன்று பங்குகளாகப் பிரிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரு பங்கைத் தமக்கு வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பங்கு உறவினர்கள், நண்பர்களுக்கு. மற்றொரு பங்கு வசதி குறைந்தவர்களுக்கு. அல்லது அனைத்தையும் ஏழைகளுக்கும் கொடுத்துவிடலாம். இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்ததார். 

நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இறைவன் அருளால் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். இப்ராஹிமின் மகன் இஸ்மாயீல் பால்ய பருவத்தை அடைந்தபொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். 

இதைப்பற்றி மகனிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியோடு பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் என்னும் வானவரை அனுப்பி இறைவன் அதனை தடுத்து மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டான். மேற்கூரிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகதிருநாள் கொண்டாடப்படுகின்றது.

 இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகைகள் நடத்தப்படுவதோடு இந்த நாளில் புத்தாடை அணிந்தும், தங்கள் வீட்டிகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதனை ஈகைத் திருநாள் என்றும் கூறுவர்.

-சிந்து-

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!