மின் கட்டண உயர்வுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்!

அமெரிக்காவின் புவேர்ட்டோ ரிக்கோ பகுதியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
குறித்த போராட்டம் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கூட்டம் கவர்னரின் மாளிகையை நோக்கி அணிவகுத்துச் சென்றதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது போராட்டகாரர்கள் போர்ட்டோ ரிக்கன் கொடிகளை உயர்த்தி, மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படுவது, தீவின் விலையுயர்ந்த வாழ்க்கைச் செலவில் தாங்க முடியாத உயர்வுக்கு வழிவகுக்கும் என்ற பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.
தற்போது முன்மொழியப்பட்டுள்ள அதிகரிப்பானது, கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்த முயற்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் தோல்வியடைந்துள்ளது.
இதேவேளை புவேர்ட்டோ ரிக்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின் கண்டனமானது, மற்ற அமெரிக்க மாநிலங்களை விட அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றது.



