தடுமாற்றத்துடன் பதிலளித்த பைடன் : அமெரிக்கர்கள் மத்தியில் எழுந்துள்ள புதிய கவலை!

#world_news #Lanka4
Dhushanthini K
2 years ago
தடுமாற்றத்துடன் பதிலளித்த பைடன் : அமெரிக்கர்கள் மத்தியில் எழுந்துள்ள புதிய கவலை!

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் செய்தியாளர்களின் கேள்விக்கு தடுமாற்றதுடன், பதிலளிப்பது அமெரிக்கர்கள் மத்தியில் கவலைகளை எழுப்பியுள்ளது.  

அதாவது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு (2024) இல் நடைபெறவுள்ளது. இதற்காக பைடன் நிதிசேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.  

அவ்வாறு சிகாகோ சென்றிருந்த அவரிடம், உக்ரைனுக்கு எதிராக போரிட்டு வரும் வாக்னர் படையினர், திடீரென மொஸ்கோவிற்கு எதிராக திரும்பினர். இதனால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பலவீனமடைந்துள்ளரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  

இதற்கு பதிலளித்த பைடன், 'உண்மையில் சொல்வது கடினம். ஆனால் ஈராக்கில் நடந்த போரில் அவர் தோற்றுபோகிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.  

அத்துடன் நேட்டோவிற்கு எதிராக மட்டும் அல்ல, ஐரோப்பிய ஒன்றியம், உள்நாட்டு போரிலும் அவர் தோற்றுப்போயுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.  

மேலும் சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்தபோதும், சில சறுக்கள்களை எதிர்கொண்டார். 

இதன்போது உலகின் சிறந்த நாடான சீனாவின் பிரதம மந்திரி என நரேந்திர மோடியை குறிப்பிட்டார். பின்னர் தனது தவறை அவர் சரிசெய்து கொண்டார்.  

இந்த விடயங்கள் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறன. பெரும்பாலான அமெரிக்கர்கள் பைடனின் வயது குறித்தும், அமெரிக்காவின் எதிர்கால நிலை குறித்தும் கவலையடுத்துள்ளதாக அறிக்கையொன்று கூறுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!