மொஸ்கோவிற்கு எதிராக திரும்பிய வாக்னர் படையினர் : அச்சத்தில் ஆப்பிரிக்க நாடுகள்!

Dhushanthini K
2 years ago
மொஸ்கோவிற்கு எதிராக திரும்பிய வாக்னர் படையினர் : அச்சத்தில் ஆப்பிரிக்க நாடுகள்!

வாக்னர் கூலி படையினர் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரக்கணக்கான துருப்புக்களை நிலைநிறுத்தியுள்ளனர். இது அந்நாட்டு தலைவர்கள் மத்தியில் பாரிய கவலைகளை எழுப்பியுள்ளது. 

ரஷ்யாவிற்கு ஆதரவாக உக்ரைனில் போரிட்டு வரும் வாக்னர் படையினர்,  தங்களுக்கு மொஸ்கோ அநீதி இழைத்துள்ளதாக கூறி அவர்களுக்கு எதிராகவே எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்தனர். 

இது உலக நாடுகள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பா கிரெம்ளின்நோக்கி நகர்ந்த வாக்னர் படையினர் பின்வாங்கியமைக்கான காரணம் என்ன?, தற்போது வாக்னர் படையினரின்  தலைவரான யெவ்கெனி பிரிகோஜின் எங்கு இருக்கிறார்?, அவர்களுடைய அடுத்த திட்டம் என்ன? என பல்வேறு கேள்விகளுக்கு அரசியல் ஆய்வாளர்கள் விடைத்தேடி வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில்,  இந்த அமைப்பு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆயிரக்கணக்கான துருப்புக்களை அனுப்பியுள்ளது. 

கடந்த தசாப்தத்தில் மாலி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு (CAR) மற்றும் லிபியா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் வாக்னர் படையினர், ஆப்பிரிக்க அரசாங்கங்களுடன் வலுவான உறவுகளை நிறுவியுள்ளனர். 

இந்நிலையில், இந்த நாடுகளின் தலைவர்கள், வாக்கனர் படையினருக்கும், தங்களுக்கும் இடையில் ஏதாவது உட்பூசல்கள் எழுந்தால், மொஸ்கோவிற்கு எதிராக திரும்பியதுபோல் தங்களுக்கு எதிராகவும் திரும்பிவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!