டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் எச்சங்கள் கண்டுப்பிடிப்பு!

ஆழ்கடலில் வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது.
செயின்ட் ஜான்ஸ், நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடரில் உள்ள துறைமுகத்திற்கு அருகில் குறித்த எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக காவல் படையினர் அறிவித்துள்ளனர்.
இந்த எச்சங்கள் நீர்மூழ்கி கப்பல் ஏன் வெடித்தது என்பதற்கான விசாரணைக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
இது குறித்து அமெரிக்க கடலோர காவல்படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலின் அடிப்பகுதியில் இருந்து குப்பைகள் மற்றும் ஆதாரங்களை மீட்டுள்ளதாகவும், அதில் மனித எச்சங்கள் எனக் கருதப்படும் விவரங்கள் உள்ளடங்குவதாகவும் கூறினார்.
TITAN நீர்மூழ்கி கப்பலின் பேரழிவிற்கு வழிவகுத்த காரணிகளைப் புரிந்துகொள்வதற்கும், இதேபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் இன்னும் கணிசமான அளவு வேலை செய்ய வேண்டியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் டைட்டன் விசாரணையில் கருத்து தெரிவிக்க முடியாது, இது அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பல அரசு நிறுவனங்களை உள்ளடக்கியது என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெஃப் மஹோனி கூறியுள்ளார்.



