வைரங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி கணிசமாக அதிகரிப்பு!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
வைரங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி கணிசமாக அதிகரிப்பு!

இரத்தினக்கற்கள், ஆபரணங்கள் மற்றும் வைரங்கள் மூலமாக இலங்கையின் ஏற்றுமதி வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்த தகவல்களை தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை வெளியிட்டுள்ளது. 

இதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2022 மே 31 வரையான ஐந்து மாத காலப்பகுதிக்குள் ஈட்டப்பட்ட வருமானத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களுக்குள் ஈடுபட்ட வருமானம் 32 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா  தெரிவித்துள்ளார். 

இதற்கமைய இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதகாலப்பகுதிக்குள் 222 மில்லியன் டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!