நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் தீர்மானம்
அரசாங்கத்தில் பணியாற்றும் விசேட வைத்தியர்களின் சேவைக் காலத்தை 63 வயது வரை நீடிக்க சுகாதார அமைச்சின் தீர்மானம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பிரேரணையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அது, சுகாதார அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் சபையின் தீர்மானத்திற்கு அமைய அரசாங்கத்தினால் பணிபுரியும் விசேட வைத்தியர்களின் சேவைக்காலம் 63 வயது வரை நீடிக்கப்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தனது பிரேரணையில் குறிப்பிட்டுள்ளார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, இந்த தீர்மானத்திற்கு அமைச்சர்கள் சபையின் அங்கீகாரம் வழங்கப்படாவிட்டால் பிரச்சினை ஏற்படக்கூடும்.
எனவும், எனவே மனுவை மீளப்பெறுவதற்கு திகதி வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், விசேட வைத்தியர்களின் சேவைக் காலத்தை 63 வயது வரை நீடிப்பது தொடர்பில் கனிஷ்ட நிபுணர்கள் குழுவொன்று தமது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
அதன்படி, இந்த மனுவை மீண்டும் செப்டம்பர் 1-ம் திகதிக்கு அழைக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது.