அஸ்வசும: தகுதியானவர்களை தெரிவு செய்வதில் ஏற்பட்ட குழப்பத்தால் கள அலுவலர்கள் கடும் சிரமத்தில்
அஸ்வசும நலன்புரி திட்டத்தில் தகுதியானவர்களை தெரிவு செய்யும் போது ஏற்பட்ட குழப்பம் காரணமாக கள உத்தியோகத்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
அஸ்வசும திட்டத்திற்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான கணக்கெடுப்பிற்காக 1,110 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அனுராத செனவிரத்ன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
குறித்த திட்டத்தில் ஏற்படும் பிரச்சினைகளை அங்கத்தவர்கள் மீது திணிக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.எம். குமாரசிங்க இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அஸ்வசும திட்டம் தொடர்பில் சமகி ஜனபலவேக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவும் கருத்து வெளியிட்டார்.