பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் பார்பி ஹாலிவுட் திரைப்படம்

#world_news #Lanka4 #திரைப்படம் #லங்கா4 #Hollywood #English Movie
பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் பார்பி ஹாலிவுட் திரைப்படம்

பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள பார்பி ஹாலிவுட் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாக உள்ள நிலையில் படத்தினை பிரபலப்படுத்தும் முயற்சியாக அமெரிக்காவில் பிரமாண்டமான வீடு ஒன்று அச்சு அசலாக பார்பி பொம்மை வீடு போன்றே உருவாக்கப்பட்டுள்ளது.

 அமெரிக்காவில் கலிஃபோர்னியா நகரத்தில் கடல் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள 3 அடுக்கு பார்பி மாளிகை முற்றிலும் இளம்சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

 நீச்சல் குளத்துடன் கூடிய இந்த பிரமாண்ட பொம்மை வீட்டில் நடன அரங்கம், உடற்பயிற்சி கூடம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

 பார்பி திரைப்படம் அமெரிக்காவில் ஜூலை 21-ம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி 21 மற்றும் 22 ஆகிய 2 நாட்கள் இந்த வீட்டில் பார்பி ரசிகர்கள் முன்பதிவு செய்து இலவசமாக தங்கலாம் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மார்கோட் ராபி மாற்றும் ரியான் கோஸ்லிங் நடித்துள்ள பார்பி திரைப்படத்தை கிரேட்டா கெர்விக் இயக்கியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!