ஜுலை முதல் மின்சாரப் கட்டண பட்டியல் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் கிடைக்கவுள்ளது
மின்சார சபை பாவனையாளர்களுக்குவழங்கும் மின்சார கட்டணப் பட்டியலுக்கு பதிலாக, டிஜிட்டல் முறையில் (SMS) குறுஞ்செய்தி மூலமும் மின் அஞ்சல் (email) மூலமும், மின் கட்டண பட்டியல்களை வழங்கும் நடைமுறை ஜூலை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், முதற்கட்டமாக எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல், களனி, தெஹிவளை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின் அஞ்சல் மூலம் மின்சார கட்டணப் பட்டியல்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நடைமுறை எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் SMS மூலம் பதிவு செய்ய, REG<space> தொடர்ந்து உங்கள் மின் பட்டியலுக்கான கணக்கு இலக்கத்தை டைப் செய்து (A/C No.) 1987க்கு அனுப்ப வேண்டும். Online இல் பதிவு செய்ய, http://ebill.ceb.lk என்ற இணையதளத்தை பார்வையிட்டு வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்றும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.