வவுனியாவில் எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!
#SriLanka
#Vavuniya
#Lanka4
Thamilini
2 years ago
வவுனியா காத்தார் சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அயந்தன் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞரின் பெற்றோர் இன்று (புதன்கிழமை) காலை வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், இளைஞன் சடலமாக கிடப்பதை அவதானித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.