வடக்கு, கிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகிறது - அண்ணாமலை!

#SriLanka #Lanka4 #annamalai
Thamilini
2 years ago
வடக்கு, கிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகிறது - அண்ணாமலை!

இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பௌத்த தொல்பொருள் கட்டிடங்கள் உருவாகிவருவது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கவலை வெளியிட்டுள்ளார். 

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரபுக்கள் சபையில் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், தாயகப் பகுதிகளில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக தெரிவித்துள்ளார். 

வரும் காலங்களில், இந்துக்களின் கலாச்சாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்த அவர்,  வடக்குகிழக்கில் பௌத்த தொல்பொருள் கட்டிடங்கள் உருவாகிவருவது குறித்தும் கவலை வெளியிட்டுள்ளார்.  

அத்துடன்  புதிதாக பௌத்த தொல்பொருள் கட்டடங்கள் இந்த பகுதியில் உருவாகிவருவது ஈழத்தமிழர்களிற்கும்,  பௌத்தர்களிற்கும் இடையில் முறுகலை உருவாக்கியுள்ளது எனவும் எதிர்வரும் தசாப்தங்களில் நிரந்தரதீர்வை காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!