இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு உதவ முன்வரும் நாடு!
#SriLanka
#Tourist
Mayoorikka
2 years ago
இலங்கைக்கு சுற்றுலாத்துறை தொடர்பில் உதவுவதற்கு ஜோர்ஜியா இணக்கம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு தொடர்பில், இலங்கைக்கும், ஜோர்ஜியாவுக்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கும், ஜோர்ஜியாவின் தேசிய சுற்றுலா நிர்வாக நிறுவனத்திற்கும் இடையே இந்த உடன்படிக்கை கையொப்பமிடப்படவுள்ளது.
குறித்த உடன்படிக்கையை கையொப்பமிடும் நோக்கில், சுற்றுலாத்துறை அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.