ஸ்வீடன் நேட்டோவின் உறுப்பினராகும் - உல்ஃப் கிறிஸ்டெர்சன் அறிவிப்பு!
#Visit
Thamilini
2 years ago
ஸ்வீடன் நேட்டோவின் உறுப்பினராகும் என அந்நாட்டு பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைவதற்கான விருப்பதை அறிவித்துள்ளன.
எதிர்வரும் ஜுலை மாதம் 11-12 ஆம் திகதிகளில் லிதுவேனியாவில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு முன்னரோ, அல்லது மாநாடு நிறைவடைந்தவுடனோ தங்களின் கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என அவ்விரு நாடுகளும் எதிர்பார்த்துள்ளன.
இதற்கிடையே உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyyயும் விரைவாக நேட்டோவில் இணைய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறியுள்ளார்.