மெக்சிகோவில் துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள்!
#world_news
Dhushanthini K
2 years ago

மெக்சிகோவின் சியாபாஸ் மாநிலத்தில் 14 மாநில காவல்துறை அதிகாரிகளை துப்பாக்கிதாரிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) கடத்திச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சியாபாஸ் மாநிலத்தின் குடிமக்கள் பாதுகாப்பு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “14 அதிகாரிகள் அனைவரும் ஆண்கள் என்றும், அவர்களைக் கண்டுபிடிக்க வான் மற்றும் தரைப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சியாபாஸின் தலைநகரை நோக்கி காவல்துறை அதிகாரிகள் பயணம் செய்த போது, டிரக் வண்டியில் வந்த ஆயுதம் ஏந்திய நபர்கள், அவர்களை கடத்தி சென்றதாக காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளைஅண்மைக்காலமாக குவாத்தமாலா - மெக்சிகோ எல்லைப் பகுதியில் மோதல் போக்கு அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



