அஸ்வசும கொடுப்பனவு: ஐந்து பிள்ளைகளின் தந்தை மரத்தில் ஏறி தூக்குப்போட முயற்சி
வெலிபிட்டிய பிரதேச செயலக வளாகத்திற்கு வந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்று 27ஆம் திகதி வெலிபிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மரமொன்றில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார்.
அஸ்வசும கொடுப்பனவுக்காக வெலிகம, தெனிப்பிட்டிய ஜெயவிக்ரம புரவில் அமைந்துள்ள வீட்டிற்கு கணக்கெடுப்பு அதிகாரிகள் வராமையினால் தனது மானியம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து அவர் இவ்வாறு மரத்தில் ஏறி கயிற்றைக் கட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
சமுர்த்தி உதவி பெறும் தனது வீட்டிற்கு கணக்கெடுப்பு அதிகாரி யாரும் வரவில்லை என்றும்இ தங்களுக்கு பிரதானமாக இருந்த சமுர்த்தி மானிய அட்டை வெட்டப்பட்டு விட்டதால், கணக்கெடுப்பு முடியும் வரை மரத்தில் இருந்து இறங்க மாட்டார்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
வெலிகம காவல்துறையின் பதில் தலைமையக பொலிஸ் பரிசோதகர் உபுல் குமார உள்ளிட்ட அதிகாரிகள் அவரை மரத்தில் இருந்து கீழே இறங்குமாறு கேட்டனர்இ ஆனால் அதிகாரிகள் சென்று வீடு வீடாக ஆய்வு செய்து பதில் அளிக்க வேண்டும் என்பதே அவரது வேண்டுகோளாக இருந்தது.