வன்முறைத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய மூன்று பாகிஸ்தான் அதிகாரிகள் பதவிநீக்கம்

#Protest #ImranKhan #officer
Prasu
2 years ago
வன்முறைத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய மூன்று பாகிஸ்தான் அதிகாரிகள் பதவிநீக்கம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் கடந்த மாதம் ராணுவ சொத்துக்கள் மீது நடத்திய வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பாக லெப்டினன்ட் ஜெனரல் உட்பட மூன்று மூத்த அதிகாரிகளை பாகிஸ்தான் ராணுவம் பணி நீக்கம் செய்துள்ளது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வன்முறை தொடர்பாக குறைந்தபட்சம் 102 பேர் தற்போது இராணுவ நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று மேஜர் ஜெனரல் அஹ்மத் ஷெரீப் சவுத்ரி ராவல்பிண்டியின் காரிஸன் நகரத்தில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் அல்லது இராணுவ அதிகாரிகள் என்பது பற்றிய விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. பணிநீக்கம் செய்யப்பட்ட மூத்த அதிகாரிகளின் பெயரையும் அவர் கூற மறுத்துவிட்டார்,

அமைதியின்மையின் போது இராணுவ சொத்துக்களின் “பாதுகாப்பு மற்றும் புனிதத்தை பராமரிக்கத் தவறியதால்” அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறினார்.

 சவுத்ரியின் கூற்றுப்படி, இராணுவ நீதிமன்றங்களில் விசாரணை செய்யப்படுபவர்களுக்கு “சிவில் வழக்கறிஞர்களை அணுகும் உரிமையும்” மற்றும் மேல்முறையீட்டு உரிமையும் உள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!