மர்மமான முறையில் இறந்து கிடந்த 4 வயது சிறுமி
#SriLanka
#Death
#Crime
Prathees
2 years ago
சீதுவ ரத்தலுகம, சாம மாவத்தை பிரதேசத்தில் வெறிச்சோடிய வீடொன்றில் இருந்து 04 வயதுடைய சிறுமியின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதே இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது. நேற்று (26) பிற்பகல் குறித்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நபர், உயிரிழந்த சிறுமியின் தந்தையின் சகோதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சிறுமி இறந்த விதம் இதுவரை வெளியாகவில்லை.