'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியீடு
#Cinema
#Actor
#TamilCinema
#Film
#Movies
Mani
1 year ago

தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 'கேப்டன் மில்லர்' படம் குறித்த அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 30ம் தேதி வெளியாகும் என்றும், அதற்கான அறிவிப்பை வெளியிடும் வகையில் ஏற்கனவே ஒரு போஸ்டரை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.



