இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் தாய் ஏர் ஏசியா விமான நிறுவனம்

#SriLanka #Flight #Lanka4 #Thailand
Kanimoli
2 years ago
இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும்  தாய் ஏர் ஏசியா விமான நிறுவனம்

இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக தாய் ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. எதிர்வரும் மாதம் 09 முதல் இது ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (ஏஏஎஸ்எல் ) நேற்று(26.06.2023) உறுதிப்படுத்தியுள்ளது.

 ஏஏஎஸ்எல் இன் தகவலின்படி, தாய் ஏர் ஏசியா பிரபலமான பாங்கொக் முதல் கொழும்பு வழித்தடத்தில் வாரத்திற்கு நான்கு முறை மீண்டும் சேவைகளை ஆரம்பிக்கும். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தினசரி 18,000-19,000 பயணிகளும் 110-120 விமானங்களும் சேவையில் உள்ளதாக விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) தெரிவித்துள்ளது.

 “சர்வதேச விமான நிறுவனங்களால் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானச் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்படுவதையும், நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதையும் கண்டு மகிழ்ச்சியடைகிறது” என்று விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) மேலும் கூறியது.

 இதேவேளை கத்தாரின் விமான நிறுவனமான, கத்தார் ஏர்வேஸ் ஜூன் மாதம் முதல் இலங்கைக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!