அமைச்சர்களும் அதிகாரிகளும் அழகான வார்த்தைகளால் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்- ஜி.எல்.பீரிஸ்

#SriLanka #G. L. Peiris #Lanka4 #srilankan politics
Kanimoli
2 years ago
அமைச்சர்களும் அதிகாரிகளும் அழகான வார்த்தைகளால் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்- ஜி.எல்.பீரிஸ்

அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை விழிப்புணர்வூட்டுவதற்காக எதிர்க்கட்சி என்ற ரீதியில் அரசாங்கம் ஒன்று திரண்டு வருவதாகவும், அரசாங்கத்தின் அமைச்சர்களும் அதிகாரிகளும் அழகான வார்த்தைகளால் மக்களை ஏமாற்றி வருவதாகவும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.

 சுதந்திர மக்கள் காங்கிரஸின் செய்தியாளர் மாநாட்டில் இன்று (26) இணைந்துகொண்ட பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கருத்துத் தெரிவித்திருந்தார். வரலாற்றில் இது வரைக்கும் ஞாயிறு தினமன்று பாராளுமன்றம் கூடியதில்லை. இது என்னவென்று தெரியவில்லை. அதுவும் ஐந்து நாட்கள் தொடர்ந்து வங்கி விடுமுறை, பங்குச்சந்தைக்கும் பூட்டு எனத் தெரிவித்திருந்த ஜி.எல்.பீரிஸ், நாடே முடங்கும் நிலை எனத் தெரிவித்திருந்தார்.

 உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு என்பது சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவு அல்ல, இது இலங்கை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டது என்று சுட்டிக்காட்டிய பீரிஸ், தனது அரசாங்கத்தின் கீழ், சர்வதேச நாணய நிதியம் பாதகமான முன்மொழிவுகளை மறுபரிசீலனை செய்யும் என்று கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!