கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணியின் பட்ல ஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் விஜய், 35.
இவரது மனைவி மாலா, 28. அருகில் உள்ள மன்ட்யம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரேஷ், 32. இவரும், விஜய்யும் நண்பர்கள்.
விஜய்யின் மனைவி மாலாவுக்கும், மாரேஷுக்கும் சமீப காலமாக கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதையறிந்த விஜய், இருவரையும் கண்டித்தார். ஆனால், இருவரும் திருந்தவில்லை. இதனால் கொதிப்படைந்த விஜய், மாரேஷுக்கு பாடம் புகட்ட திட்டமிட்டார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன், மது அருந்த வரும்படி, மாரேஷை வரவழைத்தார். அவரை நன்றாக மது. குடிக்க வைத்தார்.
அதன்பின், திடீரென கத்தியால் மாரேஷின் கழுத்தை அறுத்த விஜய், பீறிட்ட ரத்தத்தை உறிஞ்சி குடித்தார்.
இந்த காட்சியை, அவரது நண்பர்கள் சிலர் தங்கள் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
இதற்கிடையில், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரேஷை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.