செந்தில் பாலாஜிக்கு மேலும் 20 நாள் சிகிச்சை!
#Court Order
#Hospital
#doctor
#Minister
#Heart Attack
Mani
2 years ago
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையில் ரத்த குழாயில் 4 அடைப்புகள் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்யவும் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனைக்கு மாற்றாப்பட்ட அவருக்கு இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை அடுத்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, அமைச்சர் செந்தில்பாலாஜி தனி அறைக்கு மாற்றப்பட்டார்.