வடக்கின் பிரபல தமிழ் வைத்தியரும் அவரது கூட்டாளிகளும் இயக்கிய கிளி நொச்சி நீச்சல் தடாகம் விளையாட்டு அமைச்சு மீண்டும் கைப்பற்றியது.
கடந்த ஒரு வருட காலமாக கிளிநொச்சி நீர் விளையாட்டு சங்கத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் 16 6 2023 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது, இந்த நீர்விளையாட்டுச்சங்கமானது வடக்கின் பிரபலமருத்துவர் ஒருவரினதும் அவரது கூட்டாளிகளினதும் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நீச்சல் தடாகத்தினூடாக வரும் வருமானத்தையும் இந்தகுழுவினரே பங்கிட்டுக்கொள்கின்றனர் எனவும்கூறப்படுகிறது இந்த புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்டு இருந்த சரத்துக்கள் பல கிளிநொச்சி நீர் விளையாட்டு சங்கத்தினால் மீறப்பட்டுள்ளன அத்துடன் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த பயிற்சிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட பகைமை காரணமாக பயிற்றுனர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
விளையாட்டு துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். நீர் விளையாட்டு சங்கம் தன்னிச்சையாக செயல்பட்டு பல முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதால் அமைச்சுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் நீடிக்கப்பட மாட்டாது என்றும் நீர் விளையாட்டு சங்கத்தினை நீச்சல் தடாகத்தினை விட்டு உடனடியாக வெளியேறுமாறும் விளையாட்டு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அவர்களிடம் இருந்து அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.

இருந்த போதும் தாம் நீச்சல் தடாகத்தினை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும் தொடர்ந்தும் நீர் விளையாட்டு சங்கம் இந்த நீச்சல் தடாகத்தை கையகப்படுத்தி வைத்திருக்கும் என்றும் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு சில அரச அதிகாரிகளும் துணை போவதாக அறிய முடிகின்றது. கிளிநொச்சியின் பல பொது மக்களுக்கான வசதி வாய்ப்புகள் இவ்வாறுதான் கையகப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான விடயங்கள் யாருடைய தவறுகளினால் நடைபெறுகின்றன? இதற்கு பொறுப்பு சொல்வதற்கு கடப்பாடு உடையவர்கள் யாவர்? கிளி நொச்சி விளையாட்டு கழகங்களே, விளையாட்டு வீரர்களே, விளையாட்டு ஆர்வலர்களே பறிபோகும் உங்களுக்கான இந்த விளையாட்டு கட்டடத் தொகுதியினை மீட்டெடுப்பதற்கு அனைவரும் திரண்டு வாரீர் என விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


