மேற்கு வங்கத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!
#India
#Accident
#Head
#Train
Mani
2 years ago
இன்று அதிகாலை 4 மணியளவில், மேற்கு வங்க மாநிலம், பங்குராவில் உள்ள ஓண்டோ ரெயில் நிலையம் அருகே, இரண்டு சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதியதில், 12 ரெயில் பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த விபத்தில் ரெயில் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெயில் பெட்டிகளை மீட்கும் பணியும், தண்டவாளத்தை சரி செய்யும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. இரண்டு ரெயில்களும் காலியாக இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக, கரக்பூர்-பாங்குரா-ஆத்ரா வழித்தடத்தில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.