'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்தது படக்குழு

#Cinema #Film #Movies
Mani
2 years ago
'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்தது படக்குழு

துல்கர் சல்மான் நடிப்பில் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'கிங் ஆஃப் கோதா'. நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜோய் மற்றும் ஷான் ரஹ்மான் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

துல்கர் சல்மானின் 11 வருட திரையுலகப் பணியை நினைவுகூரும் வகையில், 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு, 'கிங் ஆஃப் கோதா' படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோவை நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பிரபலமாகி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!