திருத்தணி அருகே ரயிலில் அடிபட்டு விவசாயி பலி

#Tamil Nadu #Tamil People #Tamilnews #Breakingnews
Mani
2 years ago
திருத்தணி அருகே ரயிலில் அடிபட்டு விவசாயி பலி

பொன்பாடி ரயில் நிலையம் அருகே மாடு மேய்த்த போது, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற விவசாயி, ரயிலில் அடிபட்டு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருத்தணி ஒன்றியம் அலமேலுமங்காபுரம் அடுத்த ஏ.எம்.பேட்டை காலனியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் ரகு(47). விவசாயி. இவா், திங்கள்கிழமை நண்பகல் 12 மணி அளவில் தனக்குச் சொந்தமான பசு மாட்டை காலனி அருகே உள்ள ரயில் தண்டவாளப் பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது, ரகு ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளாா். அந்த நேரத்தில் குருவாயூா் அதிவிரைவு கடந்ததால், அந்த ரயில் ரகு மீது மோதியது.

இதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவல் அறிந்து அரக்கோணம் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, விசாரித்து வருகின்றனா்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!