1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது
#Tamil Nadu
#Tamil People
#government
#Bus
#Breakingnews
Mani
2 years ago

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் இயக்கும் பழமையான பேருந்துகளுக்குப் பதிலாக 1000 புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், 500 பேருந்துகளை பழுது நீக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்கு வசதியாக, போக்குவரத்து துறைக்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிதியில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு மொத்தம் 200 புதிய பேருந்துகள் வாங்கப்படும். குறிப்பாக விழுப்புரம் கோட்டத்துக்கு 190 பேருந்துகளும், கோவை கோட்டத்துக்கு 163 பேருந்துகளும், கும்பகோணம் கோட்டத்துக்கு 155 பேருந்துகளும் புதிதாக வாங்கப்படும். மேலும், மதுரை கோட்டத்திற்கு 163 பேருந்துகளும், திருநெல்வேலி கோட்டத்திற்கு 129 பேருந்துகளும் வாங்கப்படும்.



