ஆந்திராவில் சரக்கு ரயில் தடம் புரண்டது
#India
#Train
#Breakingnews
Mani
2 years ago

நேற்று, ஆந்திராவில் நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், ஒன்று தடி-அனகபள்ளி ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டது, ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சரக்கு ரயில் தடம் புரண்டதால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று, இன்று, நாளை ஆகிய 3 நாட்களுக்கு அந்த வழியாக செல்லும் 8 பயணிகள் ரயில்களை தென் மத்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.
இதனால் விசாகப்பட்டணம்-லிங்கம்பள்ளி, விசாகப்பட்டணம்-மசூலிப்பட்டணம், விசாகப்பட்டணம்-குண்டூர், விசாகப்பட்டணம்-விஜயவாடா இடையே இயக்கப்படும் ரயில்கள் இரு திசைகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.



