கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய தீர்மானம்
#India
#Parliament
#Law
Prasu
2 years ago

கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் கொண்டுவரப்பட்ட ஆர்எஸ்எஸ் நிறுவனர் தொடர்பான பாடத்தையும் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ள பட்ஜெட் சட்டமன்ற கூட்டத்தொடரின்போது இதுதொடர்பான சட்ட மசோதாவை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



