பிபர்ஜாய் புயல் குஜராத்தில் கரையைக் கடக்க தொடங்கியது
#weather
#Rain
#HeavyRain
#Cyclone
#Gujarat
Mani
2 years ago
அகமதாபாத்
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியது. 'பிபர்ஜாய்' எனப்படும் இந்த புயல், வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11ம் தேதி சூப்பர் புயலாக வலுப்பெற்றது. தற்போது, இந்த சக்திவாய்ந்த புயல் குஜராத் கடற்கரையை நோக்கி நகர்ந்து, குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள மாண்ட்வி மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையே, குஜராத்தின் ஜகாவ் துறைமுகத்திற்கு அருகில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.