கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு பாலம் இடிந்து விழுந்தது மாயமான காவலாளி 10 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு
#India
#Death
#Breakingnews
#Died
Mani
2 years ago

பீகார்:
பீகார் மாநிலம் பஹல்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கை ஆற்றின் குறுக்கே சுல்தான்கஞ்ச் - அகுவானி பகத் பகுதியை இணைக்கும் வகையில் கங்கை ஆற்றின் குறுக்கே 4 வழி பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.
கடந்த 4ம் தேதி காலை 6 மணியளவில், எதிர்பாராதவிதமாக பாலம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவம்அங்குள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலம் இடிந்து விழுந்த சமயத்தில் பாலத்தில் பணியாற்றி வந்த விபஷாகுமார் என்ற காவலாளி பணியில் இருந்தார். ஆனால் பாலம் விபத்திற்குப் பிறகு அவர் காணாமல் போனார். அவரை தேடும் பணிகள் ஈடுபட்டனர்.
விபத்து நடந்து 10 நாட்களுக்குப் பிறகு காவலர் விபஷாகுமார் இறந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாலம் இடிபாடுகளுக்கு அருகில் இன்று நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.



