கைது செய்யப்பட்ட தமிழக அமைச்சருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை

#India #M. K. Stalin #Arrest #Minister #Surgery
Prasu
1 year ago
கைது செய்யப்பட்ட தமிழக அமைச்சருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை

தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவிர அவசர சிகிரிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து தெரிவித்தனர்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும், செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!