ஒடிசா ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 289 ஆக உயர்வு
#India
#Death
#Accident
#Train
Mani
1 year ago

ஒடிசாவின், பாலசோர் மாவட்டத்தில் உள்ள பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி நடந்த பயங்கர விபத்தில் 288 பேர் பலியாகினர், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் ஏற்படுத்தியது.
நேற்று, ரயில் விபத்தில் பலத்த காயமடைந்து, பகனகா பஜார் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீகாரைச் சேர்ந்த பிஜய் பஸ்வான் உயிரிழந்தார். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 289 ஆக உயர்ந்துள்ளது.



