சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!

#today #Tamilnews #Gold #Breakingnews #ImportantNews #Chennai
Mani
1 year ago
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 13) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.44,720-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம் மே மாதம் 4-ம் தேதி ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.

இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செவ்வாய்க்கிழமை) கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,590 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.44,720 -க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,464க்கு விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 0.10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.79,200 ஆக இருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!