சிறையில் இருந்து ஜாமினில் எடுத்த மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்!

உத்தரப்பிரதேசம் பரேலியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணபால் லோதி - பூஜா தம்பதியினர். 10 வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 32 வயதாகும் பூஜா அழகு நிலையம் நடத்துகிறார். 40 வயதாகும் கிருஷ்ணபால் அடிதடி, போதை என்று திரிந்து வந்தார்.
அண்மையில் கொலை முயற்சி வழக்கொன்றில் கிருஷ்ணபால் லோதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்த கணவனை தனது நண்பன் முன்னாவுடன் ஒரு முறை சென்று சந்தித்தார் பூஜா. அப்போது முதல் மனைவி மீது கிருஷ்ணபால்க்கு சந்தேகம் வளர்ந்தது. சிறையில் இருந்தபடியே வெளியே ஆள் வைத்து மனைவியை உளவு பார்க்க ஆரம்பித்தார்.
வீடு திரும்பிய கிருஷ்ணபால் சுயரூபம் கலைந்தார். போதையில் சந்தேகப்புத்தியும் சேர்ந்துகொள்ள, மனைவியை அடித்து துன்புறுத்தினார். அப்படி ஒரு சம்பவத்தின்போது, பூஜாவின் நண்பர் முல்லா, கிருஷ்ணபாலை தட்டிக்கேட்டார்.
பூஜாவுக்காக பரிந்துப் பேச வந்த முல்லா, குண்டடி பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கிருஷ்ணபாலை மீண்டும் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.



