குஜராத்தின் கட்ச் வளைகுடா கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து பிபோர்ஜாய் புயல் உருவானது. தற்போது, துவாரகாவில் இருந்து தென்-தென்மேற்கே 380 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இந்த புயல் தீவிர சூறாவளி புயலாக மாறி ஜூன் 15ஆம் தேதி மதியம் குஜராத் மாநிலம் மாண்ட்வி மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையேயான சவுராஷ்டிரா, கட்ச் பகுதியில் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குஜராத்தில் அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பிபோர்ஜாய் புயல் காரணமாக குஜராத்தின் கட்ச் வளைகுடா கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. புயல் குறையும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கட்ச் வளைகுடா கடலோரப் பகுதிகளில் ஜூன் 15ஆம் தேதி புயல் கரையைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் ஜூன் 16ஆம் தேதி வரை 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



