சென்னை பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டது
#India
#Tamil Nadu
#Railway
#Train
#Tamilnews
#Chennai
Mani
2 years ago

சென்னை
ஒடிசா ரெயில் விபத்து சம்பவத்துக்கு பிறகு நாடு முழுவதும் ரெயில்வே ஊழியர்கள் உஷாராக பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு பேசின்பிரிட்ஜ் யார்டுக்கு சென்றபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலையில் பயணிகளுடன் சென்ற மின்சார ரெயில் திடீரென தடம் புரண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



