உத்தரப்பிரதேசத்தில் நிலுவையில் உள்ள அனைத்து போக்குவரத்து அபராத ரசீதுகளும் ரத்து
#Police
#Tamilnews
#Breakingnews
#Case
Mani
2 years ago
உத்தரப்பிரதேச அரசு 2017 முதல் 2021 வரையிலான நிலுவையில் உள்ள அனைத்து போக்குவரத்து அபராத ரசீதுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து வகை வாகனங்களுக்கும் இது பொருத்தம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அனைத்து அபராத நிலுவைத் தொகையை ரத்து செய்யுமாறு அனைத்து போக்குவரத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் போராட்டத்தின் போது அபராதங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.