பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு!
#Tamil
#Tamilnews
#ImportantNews
#petrol
Mani
2 years ago

எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இருந்து மீண்டுவிட்டதால் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயம் செய்து வந்தன.
இருப்பினும், கடந்த 383 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்ளவில்லை.
இதனால் எண்ணெய் நிறுவனங்கள் தாங்கள் சந்தித்த இழப்பை ஈடுகட்டி விட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த காலாண்டில் கணிசமான லாபத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த காலாண்டிலும் போதிய அளவு லாபம் கிடைக்கும் சூழல் நிலவுவதால் எண்ணெய் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



