தேர்தலையொட்டி நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சோதனை தொடங்கியது
#India
#Election
#Parliament
#Election Commission
Mani
2 years ago

2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறவுள்ள 5 மாநில தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சோதனை தொடங்கியுள்ளது.
அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஒத்திகை வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் சோதிக்கப்படுதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இயந்திரங்களில் பழுது கண்டறியப்பட்டால், பழுதை சரிசெய்து தரவோ அல்லது இயந்திரங்களை மாற்றித் தரவோ, அந்த இயந்திரங்கள் உற்பத்தியாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



