தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரோப் கார் நடுவழியில் சிக்கியது
#India
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் இயக்கப்படும் ரோப் கார் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக, திடீரென நடுவழியில் நிறுத்தப்பட்டதால், ஏறக்குறைய 250 பயணிகள் தங்கள் பயணத்தின் போது சிக்கித் தவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ரோப் காரில் சிக்கிய பயணிகளை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உலகின் மிக உயரமான ரோப் கார் வழித்தடங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.



