கேரளாவில் தென் மேற்கு பருவமழை இன்று தொடங்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்!
#India
#Tamil Nadu
#Rain
#HeavyRain
#Tamilnews
#Kerala
#Mountain
Mani
2 years ago

கேரளாவில் வழக்கம்போல ஜூன் 1ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரபிக் கடலில் நிலவிய காற்று சுழற்சி காரணமாக பருவமழை தொடங்குவது தாமதமானது.
இந்நிலையில், அரபிக் கடலில் மேகமூட்டம் அதிகரித்து வருவதால் பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுவதாகவும், கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை தாமதத்தால் தமிழ்நாட்டில் மே மாதத்தைவிட, ஜூன் மாதத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கினால், தமிழ்நாட்டில் வெயில் குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



