முடிவுக்கு வருமா போராட்டம்? மல்யுத்த வீரர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை

#India #Flight #Complaint #Women #sports #நீதிமன்றம் #Tamilnews #Player #Breakingnews #ImportantNews #Sports News
Mani
2 years ago
முடிவுக்கு வருமா போராட்டம்? மல்யுத்த வீரர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷன் சரண் சிங் இருக்கிறார். பிரிஜ்பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. 7 மல்யுத்த வீராங்கனைகள் அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டெல்லி போலீசில் புகார் அளித்தனர்.

இவர்கள் தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 28ம் தேதி புதிய பாராளுமன்றம் நோக்கி பேணி செல்ல முயன்ற மல்யுத்த வீராங்கனைகளை போலீசார் தடுத்து கைது செய்தனர்.

இதனால் ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப் போவதாக அவர்கள் அறிவித்தனர். விவசாயிகள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர்.

பல்வேறு தரப்பில் இருந்து மல்யுத்த நட்சத்திரங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "பிரச்சினைகள் தொடர்பாக மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் பேச்ச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. மல்யுத்த வீரர், வீராங்கனை பேச்சுவார்த்தைக்கு வருமாறு நான் மீண்டும் அழைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!