IPL கோப்பையுடன் இந்திய முதலமைச்சரை சந்தித்த CSK உரிமையாளர்
#M. K. Stalin
#IPL
#Chennai
Prasu
2 years ago
ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக கோப்பை வென்று சாதித்தது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை அணி வென்ற கோப்பையை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் என்.சீனிவாசன் மற்றும் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ரூபா குருநாத் வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.