அரசியல் மீதான நம்பிக்கையை இளைஞர்கள் இழந்துவிட்டனர்! ஜனாதிபதி

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe
Mayoorikka
1 year ago
அரசியல் மீதான நம்பிக்கையை இளைஞர்கள் இழந்துவிட்டனர்! ஜனாதிபதி

தேர்தல் மற்றும் அரசியல் மீதான நம்பிக்கையை பெரும்பாலான இளைஞர் யுவதிகள் உட்பட பொதுமக்கள் இழந்துள்ளனர்.

 அதனால் பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டாலும் 50% அதிகமான வாக்குபலத்தை பெற்றுக்கொள்ள முடியாது.

 எனவே, நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட வேண்டியது அவசியம் என நுவரெலியாவில் நடைபெற்ற 2023/2024 தேசிய சட்ட மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.