ஜனாதிபதியின் பொசன் பௌர்ணமி தின வாழ்த்து செய்தி!

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
ஜனாதிபதியின் பொசன் பௌர்ணமி தின வாழ்த்து செய்தி!

இலங்கை வரலாற்றில் மஹிந்த தேரரின் வருகை, சமய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல் என்பது மறுக்க முடியாதது. மேலும், அதன் மூலம் நாம் எண்ணற்ற சமூக, கலாசார மற்றும் அரசியல் மதிப்புகளை பெற்றுள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 பொசன் பௌர்ணமி தின வாழ்த்து செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 மஹிந்த தேரர் போதித்த வாழ்க்கை முறையின் மூலம் பெருமைமிக்க நாடாகவும் தேசமாகவும் நாம் முன்னோக்கி வந்துள்ளோம்.

 குறிப்பாக குளங்கள், வயல்கள், தூபிகள் ஆகியவற்றினால் கட்டமைக்கப்பட்ட தன்னிறைவுப் பொருளாதாரத்திற்கு வழிகாட்டிய தர்ம கருத்தாடல்கள் மற்றும் அரசியல் சமூக கலாசார கருத்தாடல்களும் மஹிந்த தேரரின் வருகையுடனேயே உருவாகின.

 இந்த பொசன் பௌர்ணமி தினத்தில், நாட்டில் ஏற்பட்ட, தற்போது படிப்படியாக தீர்க்கப்பட்டு வரும் அரசியல், சமூக பொருளாதார குழப்பங்கள் தீர்ந்து இலங்கையை உலகின் மீண்டும் முன்னேற்றம் அடைந்த நாடாக உயர்த்துவதற்கு இந்த பௌர்ணமி தினத்தில் நாம் அனைவரும் உறுதிபூணுவோம்.

 இந்த பொசன் பௌர்ணமி தினத்தில், மஹிந்த தேரரின் வருகையால் கிடைத்த தூய பௌத்தம் மற்றும் செழுமையான பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க தங்களை அர்ப்பணிக்குமாறு அனைத்து பௌத்த மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் பொசன் பௌர்ணமி தின வாழ்த்துக்கள் !

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!