மும்பை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்ணால் சம்பவ இடத்தில் பரபரப்பு!

#India #Airport #Bomb #Mumbai
Mani
2 years ago
மும்பை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்ணால் சம்பவ இடத்தில் பரபரப்பு!

மும்பையில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு பெண் பயணி நேற்று பயணம் செய்ய வந்தார். அதிக எடையுள்ள லக்கேஜ் கூடுதல் கட்டணம் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது. இதனால், தனது லக்கேஜில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அந்த பெண் கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள், அந்த பெண்ணின் உடமைகளை சோதனையிட்டனர். ஆனால், அவற்றில் சந்தேகத்திற்கிடமான எதுவும் காணப்படவில்லை என்றும், அவரது லக்கேஜ்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தாமல் தப்பிப்பதற்காக அப்பெண் செய்த புரளி என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

பெண்ணின் வெடிகுண்டு புரளியால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு புரளிக்கு காரணமான பெண்ணை விமான ஊழியர்கள் பிடித்து சகார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அந்த பெண்ணை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதன்பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!